பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

31



________________

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை 31 இந்த லார்டு மைதானம் உருவாவதற்குள், அதன் அங்கத்தினர் கள் பலமுறை அச்சுறுத்தல்களுக்கும் அவதிகளுக்கும் ஆளாயினர். ஒவ்வொரு முறையும் அவர்கள் தப்பித்திணறி வெளிவந்து வெற்றிகொள்ளும் வாய்ப்பினையும் பெற்றிருக்கின்றனர் என்பது ஒரு சுவையான கதையாகும். இந்த மைதானத்தை 18,000 ஷில்லிங் கொடுத்து மெரிலிபோன் கிரிக்கெட் சங்கம் வாங்கிக்கொண்டது, வெற்றிக்கண்டது என்பதும் அவர்கள் கிரிக்கெட் ஆட்டத்தின் மேல் கொண்டிருந்த பேரன்பையும் பிடிப்பையுமே காட்டுகிறது. இவ்வாறு வாய்ப்பிலும் வசதியிலும் எம்.சி.சி. பெருகிக் கொண்டே வந்தது. ஏற்கனவே சிறந்த பரந்த இடத்தைப் பெற்று வந்த ஹேம்பிள்டன் கிரிக்கெட் சங்கத்தை விட புகழிலும் பெருமையிலும் அதிகமாகி, இங்கிலாந்திலேயே வலிமையும் திறமையும் நிறைந்த சங்கம் எம்.சி.சி. தான் என்ற மகோன்னத நிலையை அடைந்து நின்றது. அதனால் ஹேம்பிள்டன் சங்கத்திற்கு முன்போல மக்களிடையே விளங்கிய மதிப்பு, கொஞ்சங் கொஞ்சமாக குறையலாயிற்று, கிரிக்கெட் ரசிகர்களும் ஆதரவாளர்களும் எம்.சி.சி யையே தங்களது கிரிக்கெட் ஆட்டத்தின் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளலாயினர். எந்தத் தகராறு ஏற்பட்டாலும், அதனைத் தீர்த்து வைக்கின்ற தகுதியும் திறமையும் உடையவர்களாக எம்.சி.சி. நிர்வாகிகள் உயர்ந்தனர். அதற்கும் உதவுவது போல் ஒரு சூழ்நிலை அந்த நேரத்தில் உருவாகியது. பந்தை எந்த முறையில் எறிவது? ஆரம்ப நாட்களில் பந்தைக் கீழாகக் கையை வீசி உபயோகப்படுத்தியே (Under Arm Bowling) எறிந்து வந்தார்கள். இவ்வாறு எறிவதிலும், மிகவும் வேகமாகவும் விக்கெட்டை நோக்கிக் குறிபார்த்து எறிவதிலும்