பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


ஆண்டு வரை தொடர்ந்து இந்த கைவளைத்து எறியும் ஆட்சிமுறை தொடர்ந்து தான் வந்தது. 1827ம் ஆண்டு, இங்கிலாந்துக்கும் சசக்ஸ் என்ற இரு குழுக்களுக்கும் மூன்று போட்டிகள் சோதனையாக (புது எறிமுறையைப் பற்றி) நடைபெற்றன. சசக்ஸ் பகுதியில் இருந்த வில்லியம் வில்லி ஒய்ட், ஜேம்ஸ் பிராட்ரிட்ஜ் இருவரும் சிறப்பான முறையில் புது எறியை எறிந்து காட்டினார்கள். இம்முறை சரிதான் என்று, மெரிலிபோன் கிரிக்கெட் சங்கமும் (M.C.C.) ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தது. 1928 ம் ஆண்டு இந்த விதிமுறை அமுலுக்கு வந்து, ஆட்டத்தில் பங்கு கொண்டது. கை வளைத்து எறிகின்ற ஆட்டமுறை வந்தபோது, ஆடுகளங்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படாத நிலையினில்தான் இருந்தன. 1850ம் ஆண்டுவரை, கிரிக்கெட் மைதானத்தில் உள்ள புல்லினை ஆட்டு மந்தைகள் வந்து மேய்ந்தது. மேடு பள்ளம் நிறைந்த தரையாக மாற்றி வைத்திருக்கும் அவலநிலையிலே தான் மைதானங்களும் இருந்து வந்தன. என்றாலும், ஆட்டத்தில் மந்த நிலையே வராத, விறுவிறுப்பான வளர்ச்சி நிலைதான் தொடர்ந்து இருந்து வந்தது. 1862ம் ஆண்டு, பந்தெறிமுறையில் மேலும் ஒரு புதிய திருப்பம் உண்டாயிற்று, இங்கிலாந்து, சர்ரே எனும் இரு குழுக்கள் ஆடிய போட்டி ஆட்டம், ஒவல் மைதானத்தில் நடைபெற்றபோது, எட்கர் வில்லிஷர் (Edgar willisher) என்பவர், முழங்கைக்கு மேல் அவர் முன் கை வராமல் பந்தைச் சுழற்றி எறியும் தன்மைக்கு மாறாக, தோளுக்கு மேலே முன்கையை உயர்த்தி (Overhand Bowling) எறியத் தொடங்கினார். நின்றிருந்த நடுவர், அதை முறையிலா பந்தெறி என்று அறிவித்தார். கோபமடைந்த எட்கர்