பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


அடுத்து, ஐந்தாவது படத்தில் , நீளத் தொப்பியிருப்பதைப் பாருங்கள். அதுவே அலங்காரம் என்று ஆசையுடன் அணிந்து ஆடியவிதத்தை முன்பக்கத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள்.

இவ்வாறு தொப்பியும், மேல் சட்டையும் மாறி மாறி வந்திருப்பதைத்தான் மேலே உள்ள படங்கள் விளக்குகின்றன.

10. ஒட்டத்தைக் குறித்த முறைகள்

எவ்வளவு வேகமாகப் பந்தை எறிந்தாலும், எத்தனை தான் பந்தை தூரப் போகும்படி அடித்து ஆடினாலும், எத்தனை ஒட்டங்கள் எடுக்கப்பட்டிருந்தன என்பதை இறுதியாக வைத்துத்தானே, ஆட்டத்தின் ஓட்டத்தைக் குறிக்க என்று, பலர் இந்த பணியில் இன்று ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள்.

ஆனால் ஆரம்ப நாட்களில், ஓட்டங்களைக் குறித்திருக்கும் முறையே மிகவும் வேடிக்கையான ஒன்றாக அமைந்திருக்கிறது. பக்கம் 45ல் உள்ள படத்தைப் பாருங்கள். ஒருவர் தனியாக அமர்ந்து, ஓட்டங்களைக் கணக்கிடும் பணியிலே அமர்ந்திருக்கின்றார்.

அவர் ஒரு கையிலே கத்தியும், மற்றொரு கையில் நீண்ட குச்சி (Stick) ஒன்றும் இருக்கின்றது. ஒட்டக்காரர் ஒருவர் ஒரு ஒட்டம் எடுத்தால், அதைக் குறிக்க அந்தக் கம்பில் ஒரு கீறு கீறி (Notch) அடையாளம் செய்வார்.

ஸ்கோள் (Score) என்கிற ஆங்கில வார்த்தைக்கு 'அடையாளம் செய்' என்பதுதான் பொருள். இங்கே, ஓட்டத்தின் எண்ணிக்கையைக் குறிக்க, குச்சி ஒன்றில் கீறி அடையாளம் செய்து ஒன்று, இரண்டு என்று எண்ணியிருக்கின்றார்கள்.

ஒரு வட்டம் என்றால் , 'ஒரு கீறு' என்று சாதாரணமாகக் கீறி அடையாளம் செய்வார். அந்தக் கீறலின் எண்ணிக்கை பத்து என்று வந்து விட்டால், அந்தப் பத்து என்பதனை உடனே தெரிந்து கொள்ள, அந்த இடத்தை நீளமாகவும், அகலமாகவும் ஆழமாகவும் குச்சியில் கீறி அடையாளம் செய்தனர்.