பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61


99. நடுவர்மீது பந்து பட்டால் எப்படி தீர்மானிப்பது?

ஆடுகளத்தில் இருக்கும் ஒரு ஆள் அல்லது தடங்கல் பொருள் எதுவாக இருந்தாலும், நடுவர்கள் முன்னரே பேசி முடிவு செய்திருந்தாலொழிய, அது எல்லை என்று கூறப்படமாட்டாது. அவர்கள் அது எல்லை என்று குறித்து வைத்திருந்தால்தான், எல்லை யென்று ஏற்றுக்கொள்ளப்படும்.

அதேபோல் நடுவர் மீது பட்டால், அது எல்லையல்ல. ஆடுகள மைதானத்தில் பந்து உள்ளது என்றே கருதப்படும்.

அது போலவே, காட்சித் தெளிவுக்காகவும், கண் கூசாமல் இருப்பதற்காகவும் வைக்கப்படுகின்ற திரைப் பலகைகள் (Screen Boards) ஆடுகளத்தில் உள்ளதாக அதாவது மைதானத் தரையிலிருப்பதாகவே ஏற்றுக் கொள்ளப்படும்.

100. 6 ஓட்டங்களை நடுவர் அளிப்பது எப்பொழுது?

பந்து உருண்டு எல்லையை கடந்து விடுகின்ற பொழுது 4 ஓட்டங்கள் தருவது பொதுவான விதிமுறையாகும்.

ஆனால், மைதான எல்லைக் கோட்டை அல்லது எல்லைக்கு அப்பால் போய் விழுகின்ற பந்துக்காகத்தான் 6 ஓட்டங்கள் (Six) கொடுக்கப்படுகின்றன.

மைதானத்திற்கு அப்பால் போய் விழுகின்ற பந்தானது, மைதானத்தில் உள்ள தடுத்தாடும் ஆட்டக்காரர்களைத் தொட்டுவிட்டுப் போயிருந்தாலும், அதற்கு 6 ஓட்டங்கள் உண்டு.

அதேபோல், மைதான எல்லைக் கோட்டின் மேல் விழுந்தாலும், அல்லது திரைப்பலகைகள் மீது பந்து விழுந்தாலும், அது எல்லைக்கு அப்பால்