பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74


123. ஒரு பந்தெறியாளர், தனது பந்தெறிதவணையை முழுதும் (One over) முடித்தாடாமல், இடையில் வேறு ஒருவரை எறியச் செய்யலாமா?

தான் எறிய இருக்கின்ற (5 அல்லது 8 எறிகள் அடங்கிய) ஒரு பந்தெறிதவணையை அவரேதான் தொடர்ந்து முடிக்கவேண்டும். அவரால் பந்தெறிய இயலாமல் போய்விடுகிறதென்றால் அல்லது தவறாக ஆடினார் என்று ஆட்டத்தை விட்டே நீக்கப்படுகிறார் என்றால் தான் முடியாதே தவிர, மற்ற சமயத்தில், அவரே தான் பந்தெறிதவணையை எறிந்து முடிக்க வேண்டும்.

124. ஒரு பந்தெறியாளர் எப்பொழுது பந்தெறியும் வாய்ப்பை இழக்கிறார்? அதற்கென்று ஏதாவது விதிமுறைகள் இருக்கின்றனவா?

இருக்கிறதே! நடுவர் குறிப்பிடும் கீழே காணும் காரணங்களுக்காக, ஒரு பந்தெறியாளரை எறியவிடாமல் தடுத்திட வாய்ப்பைத் தடுத்திட அநேக விதிகள் உண்டு.

ஒரு பந்தெறியாளர், தான் பந்து வீகம்போது பந்தடி ஆட்டக்காாரை நோக்கி, பந்தைக் குத்தி உயரச் செய்து (Short Pitched Balls) பயமுறுத்தி, அபாயகரமான முறையில் ஆடுகிற முறை முறையற்ற தவறான ஆட்டமாகும்.

இவ்வாறு அச்சமுறுத்தி ஆடுகின்ற முறையினைக் கண்காணிக்கும் நடுவர், அதனைக் கண்டு கொண்ட பிறகு, இது உண்மையென்ற முடிவுக்கு வருவதில் திருப்தியடைந்தால், அந்த முறையைத் தடுத்திட, நடுவருக்கு முழு உரிமையுண்டு.