பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


10. ஆடுதற்கேற்ற உபகரணங்கள் சரியான நிலையில் இல்லை என்று ஒருவர் கருதுகின்ற போதும். முறையற்ற ஆட்டத்தை ஆட்டக்காரர்கள் ஆடுகின்றார் என்று தீர்மானிக்கின்றபொழுது.

11. பந்தெறியாளர் எறிய ஓடி வர முனைகிறபொழுதிற்குள்ளே, ஒரு 'ஓட்டம்' எடுக்கிறபொழுது.

12. ஒரு பந்தடித்தாடும் ஆட்டக்காரர், பந்தை அடித்தாட்டத் தயாராக இல்லாமலும், அவ்வாறிருக்கும் நிலையில் எறியப்பட்டிருக்கும் பந்தை அடித்ததாட முயற்சிக்காமல் இருக்கும்பொழுது.

13. ஒரு பந்தெறியாளர் பந்தெறிகிற தருணத்தில், தவறுதலாகப் பந்தை நழுவ விட்டிருக்கின்றபொழுது.

14. அல்லது, எறியும் நேரத்தில், பந்து கையை விட்டு வெளியே வராமல் கைக்குள்ளே தேங்கி நிற்கிறபொழுது.

15. பந்தெறியாளர் எறிந்து, பந்தை அடித்தாடுகின்ற நேரத்திற்கு முன்பே பந்தடித்தாடுபவர் தாக்கும் விக்கெட்டிலிருந்து இணைப்பான் அல்லது இணைப்பான்கள் கீழே வீழ்ந்து விடுகிறபொழுது.

16. விக்கெட்டில் பந்து பட்டு (அதனால் ஆட்டக்காரர் ஆட்டமிழக்காது போனால்)விக்கெட் விழுந்தாலும் அல்லது எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் முறையிட்டு (Appeal) அது வெற்றிகரமான நிலையை தோற்றுவிக்காத பொழுது.

பந்து நிலைப் பந்தாக மாறிவிடுகிறது.

128. நடுவர்மேல், ஆட்ட நேரத்தில் விழுகிற பந்து நிலைப்பந்தா ?