பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


அதாவது, கைகளில் சென்றடைந்து விட்டது எப்பொழுது என்கிற நிலையை நடுவர் ஒருவரே முடி வெடுக்க முடியும்.

2. எல்லைக்கு வெளியே பந்து உருண்டு போயிருந்தால், அல்லது அடி பட்ட பந்தானது எல்லைக்கு வெளியே போய் விழுந்திருந்தால்.

3. பந்தை விளையாடுகிற அல்லது விளையாடாத நேரத்தில், பந்தைத் தடுத்தாடுகின்ற ஆட்டக்காரர் அல்லது நடுவரின் உடைக்குள்ளே சென்று பந்து தேங்கிவிடுதல்.

4. 'பந்தெறி தவணை' வாய்ப்பானது முடிந்து விட்டது (Over) அல்லது ஆடும் நேரம் முடிந்து விட்டது (Time) என்று நடுவர் அறிவிக்கின்றபொழுது.

5. ஒரு பந்தடித்தாடும் ஆட்டக்காரர் ஏதாவது ஒரு காரணத்தால், ஆடும் வாய்ப்பிழந்து (Out) மைதானத்தை விட்டு வெளியேறுகிறபொழுது.

6. விளையாடுகின்ற நேரத்தில் பந்து காணாமல் போய்விடுகின்றபொழுது.

7. தடுத்தாடும் ஆட்டக்காரர்,விதியை மீறியவாறு, வேண்டுமென்றே அடித்தாடி வருகின்ற பந்தை தனது உடையால் அல்லது தான் அணிந்திருக்கின்ற தொப்பி அல்லது குல்லாவினால், பந்தைத் தடுத்தாடுகின்றபொழுது.

8. ஆட்டக்காரர்களில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கின்றபொழுது

9. வேண்டுமென்றே, பந்தடித்தாடும் ஆட்டக்காரர் பந்தை உதைத்தாடுகின்றபொழுது.