பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


பந்தெறிபவர்களின் பக்கம் நிற்கின்ற நடுவரின் பணிகள் :

1. முறையிலா பந்தெறி (No ball) எது என்பதை, அடித்தாடும் எல்லைக் கோட்டைக் (Popping crease) கடந்து வந்து பந்தெறிபவர் எறிகின்றாரா, பந்தை வீசி எறிகின்றாரா (Throw) அல்லது பந்தை எறியும் நேரத்தில் ஒரு துள்ளு துள்ளி (Jerk) எறிகின்றாரா என்பதையெல்லாம் கண்காணிக்கிறார்.

2. பந்தெறிபவரது கையிலிருந்து போகின்ற பந்து, பந்தை அடித்தாடும் மட்டையில் படும் வரை, பட்ட பிறகு என்ன நடக்கிறது என்பதையெல்லாம் தொடர்ந்து கண்காணிக்கிறார்.

அதாவது, விக்கெட்டுக்கு முன்னே கால் (L. b. W.); மட்டையில் பட்டு பந்து உயர்ந்து போனதா; தரையில் பட்டுத்தான் மேலே உயர்ந்ததா; மட்டையில் படாமல் போனதா; விக்கெட் காப்பாளர் அந்தப் பந்தைப் பிடித்தாரா (Catch) என்பனவற்றையெல்லாம் கவனிக்கிறார்.

3. அடிபட்டுப் போன பந்து பிடிபட்டதா (Caught), எல்லைக்கு வெளியே உருண்டு போனதா அல்லது வெளியே போய் விழுந்ததா, அதற்குள் எத்தனை 'ஓட்டங்கள்' எடுத்தார்கள்? பாராவது (தடுத்தாடும் ஆட்டக்காரர்கள், அடித்தாடும் ஆட்டக்காரர்கள் இவர்களுக்குள்ளே) தடை செய்வது போல தடுத்தாடிக் கொண்டார்களா, அல்லது ஓட்டத்திற்கிடையில் ஆட்ட மிழந்தார்களா (Run out) என்பதையும் பார்க்கவேண்டும்.

4. விக்கெட் காப்பாளரிடம் பந்து வருகிறதா, சரியான முறையில் சரியான சமயத்தில் இணைப்-