பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போபையர்

19


இத்தகைய அரிய தமிழ் நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்தும் வகையில் மிகுந்த கைப்பொருளைச் செலவிட்டார் போப்பையர். அவற்றை ஆங்கில நாட்டார் அதிகமாக வாங்கி ஆதரிக்க மாட்டார் என்பது இவருக்கு நன்கு தெரியும். ஆயினும் தம் கைப்பொருளைச் செலவு செய்தேனும் தமிழ் நாட்டாருடைய கலைச் செல்வத்தையும் ஞானத்தையும் மேலே நாட்டாருக்குக் காட்டுதல் வேண்டும் என்பதே இவர் கருத்து. 'தமிழ்ப் புலமையே வறுமைக்கு நேரான வழி' என்று இவர் அடிக்கடி கூறுவதுண்டு. எனவே, பயன்கருதாது தமிழ் மொழிக்குத் தொண்டு புரிந்த பெருமக்களில் போப்பையரும் ஒருவர் என்று கூறுதல் ஒரு சிறிதும் மிகையாகாது.

பழுத்த புலவராகிய போப்பையர் எண்பத்தாறாவது வயதை எட்டினர். அப்பொழுது ஆங்கில நாட்டுக் கலைஞர் சங்கம் இவரைப் பெருமைப்படுத்த முன்வந்தது. மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாராணியாருடைய வயிர விழாவின் ஞாபகார்த்தமாக ஆங்கில நாட்டு ராயல் 'ஏஷியாட்டிக் சொசைட்டி' என்ற சங்கத்தில் ஒரு தங்க மெடல் பரிசு ஏற்படுத்தியிருந்தார்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசாங்கத்தார் தேர்ந்தெடுக்கும் அருங்கலைவாணர் ஒருவருக்கு அப்பரிசு வழங்கப்பட்டு வந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஆறாம் ஆண்டில் அப்பரிசு பெறுவதற்கு உரியவராகப் போப்பையர் தேர்ந்-