பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கார்டுவெல் ஐயர்

31


ஆரிய மொழியின் இலக்கணம் வேறு, திராவிட மொழியின் இலக்கணம் வேறு என்பதைக் கால்டுவெல் தமது ஒப்பிலக்கணத்தில் தெள்ளத் தெளிய உணர்த்தினார்; தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளுக்கும் அடிப்படையான இலக்கணம் ஒன்றே என்பதைச் சான்று காட்டி நிறுவினார் ; தென்னிந்திய மொழிகளைத் திராவிட மொழி என்னும் பொதுச் சொல்லாற் குறித்தார். அவர் இட்ட பெயர் மொழிநூல் உலகத்தில் நிலைத்துவிட்டது.

தமிழ் மொழியைக் குறித்து ஒப்பிலக்கணத்திற் காணப்படும் இரண்டொரு கருத்துக்களை இங்கே கூறலாம். சங்க காலம் என்று சொல்லப்படும் பழங் காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் ஆரியச் சொற்கள் அருகியிருத்தலையும், பிற்காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல்களில் ஆரியப் பதங்கள் பெருகியிருத்தலையும் கால்டுவெல் ஐயர் எடுத்துக் காட்டுகின்றார். தமிழ் மொழியில் பல கருத்துக்களை உணர்த்தக்கூடிய பதங்கள் இருந்தும், அவற்றைக் கைவிட்டு ஆரியப் பதங்களே எடுத்தாளும் பழக்கம் ஏற்பட்டதனாலேயே நாளடைவில் பல தமிழ்ச் சொற்கள் இறந்து பட்டன என்று கூறுகின்றார். இன்னும், ஆரியச் சொற்களின் உதவியின்றியே தமிழ் தனித்து இயங்கவும், செழித்து ஓங்கவும் கூடும் என்று சொல்கின்றார். இவை போன்ற பல ஆழ்ந்த கருத்துக்கள் ஒப்பிலக்கணத்தில் ஆராய்ந்து கூறப்பட்டுள்ளன. சுருங்கச் சொல்லின், திராவிட