பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எல்லீசர்

37


ஆழி எனப் பிரித்துப் பிறப்பாகிய கடல் என்று பொருள் கொள்வாரும் உளர். எல்லீசர் வேறு ஒரு பொருள் கூறுகின்றார், அறமே உருவாய இறைவனை அறவாழி என்றமையால், அறத்தின் மாறுபட்ட பாவக்கடல் 'பிறவாழி' என்னும் பதத்தால் குறிக்கப்பட்டது என்பது அவர் கருத்து[1]. இவ்வாறு சில குறட்பாக்களுக்குப் புதியவுரை கண்டுள்ளார் எல்லீசர்.

தென்னாட்டு மொழிகளில் துரைத்தனத்தார்க்கு முறையாகப் பயிற்சியளிக்கும் வண்ணம் சென்னை அரசாங்கத்தார் கல்விச் சங்கம் ஒன்று நிறுவினர்.[2] அச் சங்கத்தை அமைப்பதற்குப் பெருமுயற்சி செய்தவர் எல்லீசரேயாவர். அதனை நேரில் அறிந்த தமிழறிஞர் ஒருவர் அவர் பெருமையை மனமாரப் புகழ்ந்துள்ளார். கொழு கொம்பில்லாது அலைகொடி போலும், கொழுநன் இல்லாக் குலக்கொடி போலும், ஆதாரமின்றித் தேய்ந்து கிடந்த ஆரியம், தெலுங்கு,


  1. அறவாழி the sea of virtue occuring at the beginning of the couplet as an epithet of the Deity. பிறவாழி the other sea signifies consequently that which different from virtue, that is, the sea of vice: thiru- valluvar uses this term பிற to designate of some quality or thing previously mennoned
    Ellis—p.14
  2. In 1812 Government created the Boards for the College of Fort St. George. The Colleg besides training the Civil servants in the vernaculars of the Province supervised the instruction of mmshisa and of persons who were to be appointed as law officers and pleaders in the Provincial Courts. This College had a very useful career.
    History of Madras—P. 216.