பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

முடிவுரை


குறைபாடுகளை நீக்கி, குற்றம் களைந்து, செப்பனிடும் பணியைச் சென்னை பைபிள் சங்கத்தார். ரேனியஸ் ஐயரிடம் ஒப்புவித்தனர். அவர் அந் நூலைத் திருத்துவதிற் பயனில்லை என்றறிந்து தாமே ஒரு மொழி பெயர்ப்புச் செய்து தந்தார், அதனைப் பைபிள் சங்கத்தார் ஏற்றுக்கொள்ள வில்லை. இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் கிருஸ்தவப் பணி செய்து கொண்டிருந்த பெர்சிவல் ஐயர் தமது மொழி பெயர்ப்பைப் பைபிள் சங்கத்தில் சமர்ப்பித்தார். அதனையும் அச்சங்கத்தார் விருப்புடன் ஏற்றுக்கொள்ளவில்லை. அந் நிலையில் கிருஸ்தவ வேத நூலைப் பல்லோரும் ஏற்றுப் போற்றும் வகையில் மொழி பெயர்த்தல் தனிப்பட்ட ஒருவரால் முடிவதன்று என்று - கருதிய கிருஸ்து மத சங்கத்தார் பன்னிருவர் அடங்கிய ஒரு கழகத்தை அமைத்து, அப்பணியை அதனிடம் ஒப்புவித்தனர். பவர் என்பவர் அக் கழகத்தின் தலைவர்.[1] கால்டுவெல் ஐயரும், சார்சந்தரும் அதன் அங்கத்தினரில் இருவர். தமிழ்ப் புலமை வாய்ந்த முத்தைய பிள்ளை கழகத்தார்க்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். அவர்கள் பல்லாண்டு. பழுதறப் பணி செய்து 1871-ம் ஆண்டில் தமிழ். பைபிளை வெளியிட்டார்கள். ஆங்கில நாட்டு இளவரசர் திருநெல்வேலிக்கு விஜயம் செய்தபோது தமிழ்


  1. Bower, was an Anglo-indian, who worked in the S. P. G. Mission and obtained the degree of D. D.. from Lambeth. -
    -The. C. M. S. in Tinnevelly : p. 152.