பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிவுரை

85


பைபிளை அவர்க்குக் கையுறையாக அளித்து மகிழ்ந்தனர் கிருஸ்துமத சங்கத்தார்[1].

தமிழ் பைபிளை வெளியிடும் பணியை மேற்கொண்ட கழகத்தில் தமிழ்ப் புலவராக விளங்கிய முத்தைய பிள்ளை என்பவர் இரக்ஷணிய கவிஞராகிய கிருஷ்ண பிள்ளையின் தம்பியாவர். அவர் இலக்கியமும் இலக்கணமும் முறையாகக் கற்றறிந்தவர்; தத்துவ ஆராய்ச்சியில் தனிப் பற்றுடையவர் ; ஜன விநோதனி என்னும் வாரத் தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராகச் சில காலம் பணி செய்தவர்; 'வேதாந்த சாரம்' முதலிய பல வசன நூல்களை இயற்றியவர்[2]. தமிழ் பைபிளுக்கு அவர் செய்த சேவை சாலச் சிறந்ததாகும்.

இங்ஙனம் ஆங்கிலமும் தமிழும் அறிந்த கிருஸ்தவத் தொண்டர்கள் சிறந்த தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும், உயர்ந்த ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தும் நற்பணி செய்து வரும்பொழுது, சில அறிஞர் தமிழ் நாட்டில் வழங்கும் பழமொழிகளை ஆராயத் தலைப்பட்டனர். ஒவ்வொரு நாட்டிலும் பழமொழிகளுண்டு. அவற்றால் மக்களின் பழக்க வழக்கங்களும் பண்பாடும் நன்கு புலனாகும். தமிழ்நாடு


  1. The complete Tamil Bible was published in 1871 and copies of it and of the Prayer Book beautifully bound were presented to the Prince of Wales when he visited Tinnevelly in 1875 --ibid. p. 152.
  2. சென்னை ஹைக்கோர்ட்டில் நீதிபதியாக இருந்தவரும் Council of state என்னும் சட்டசபையின் உறுப்பினராக இருந்தவரும் ஆகிய சர். டேவிட் தேவதாஸ் இவருடைய புதல்வர்.