பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நாம் முன் கதையில் கூறியபடி, ஒலிம்பிக் பந்தயம் நடப்பதற்கு முன், எல்லிஸ் என்னும் இடத்தில் ஒரு மாதத் தனிப் பயிற்சி நடக்கும். அதில் கலந்து கொள்வதற்காக, தன்னுடைய கப்பலிலே பயிலஸ் பயணமானான். கிரேக்க நாட்டை பயிலஸ் அடைந்த பொழுது, ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்கின்ற காரியத்தை விட, வேறொரு முக்கியமான கடமை அவனுக்காகக் காத்திருந்தது போல, அவசரமாக அமைந்திருந்தது.

பாரசீக நாட்டின் கப்பல் படையானது, கிரேக்க நாட்டின் மீது படையெடுத்து, அதனை வென்று விடுகின்ற நிலைமையில போர் மூண்டிருந்த நேரம் அது. தான் எதற்காக வந்தோம் என்பதை பயிலஸ் மறந்தான். தாயகம் காக்கின்ற பெரும் பணியே அவன் தலையாய நோக்கமாக இருந்ததால், தான் வந்த சொந்த வேலையை மறந்தான்.

கிரேக்கக் கப்பல் படையுடன் தன் கப்பலையும் ஒன்றாக சேர்த்தான். மேற்குக் கிரேக்கப் பகுதியின் ஒரே பிரதிநிதியாக, கிரேக்கத்திற்காகப் பயிலஸ் போரிட்டான். இறுதியில், ஆட்டிப் படைத்த அச்சத்திற்கு ஆளாகி நின்ற கிரேக்கம், வெகுண்டு வந்த பகைவர்களை விரட்டியடித்து வெற்றி பெற்றது. கப்பல் படையுடன் வந்த பாரசீகத்தார், கதிகலங்கி கடலிலே கலம் செலுத்தி, விரைந்தோடி மறைந்தனர்.

போர் முடிந்து, ஒலிம்பிக் பந்தயக் களம் நோக்கிப் புறப்பட்டான் பயிலஸ் பந்தயத்தில் கலந்துகொள்ள பரபரப்புடன் சென்று பார்த்தால், பந்தயங்கள் நடந்து முடிவு பெற்றிருந்தன. எழுச்சியுடன் வந்த வீரனுக்கு, ஏமாற்றமே பரிசாக அமைந்தது. அதற்காக அவன் கலங்கவோ, தன் விதியை சபித்துக் கொள்ளவோ இல்லை; நற்றவ வானினும் நனி சிறந்தத் தாயகத்தைப், போரிட்டுக் காத்தோம் என்று பரம திருப்தியடைந்து போனான் பயிலளல். என்றாலும்,