பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

125


போயிருப்பான்! வெளியே செல்ல வழி ஏதும் இல்லை? என்று வியப்பாலும் அச்சத்தாலும் சிலையாகி நின்றனர் அனைவரும்.

பிறகு, தங்களது முக்கியமான மனிதர்களில் சிலரை டெல்பி எனும் இடத்திற்கு அனுப்பி, அருள்வாக்குக் கேட்டு வருமாறு அனுப்புகின்றனர். கிளியோமிடஸ் என்ன ஆனான், எங்கே போனான் என்று கேட்ட அஸ்திபாலா நகர முக்கியஸ்தர்களுக்கு, மேலும் ஒரு அதிர்ச்சி.

குத்துச் சண்டைக்காரர்கள் என்றால் கடவுளுக்குக் கருணையுள்ளம் உண்டு. இப்பொழுது அவன் குட்டிக் கடவுள். (Demigod) ஆகிவிட்டான். ஆகவே, அவனுக்குள்ள மரியாதை எல்லாம் நீங்கள் செய்ய வேண்டும் என்று அந்த அசரீகூறியது. கேட்டவர்கள் கலங்கிப் போனார்கள்.

அவர்களும் வேறு வழியின்றி அசரீரீ வாக்கை தேவவாக்காக ஏற்றுக் கொண்டு, கிளியோமிடஸை குட்டித் தெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.

சாதாரண வாழ்க்கையிலே சரித்திரப் புகழைப் பெற முடியாத கிளியோமிடஸ், குட்டித் தேவதையாக மாறுகின்ற பெரும் பேரினை பெற்றுக் கொண்டான்.

சிறந்த வீரர்களுக்கு வரலாற்றில் மந்திர தந்திர சக்தியை புனைந்து, பரபரப்பு ஊட்டும் மாயா ஜாலக் கதைகளை கற்பனை சாதுர்யத்துடன் படைத்துவிடுகின்ற ஆற்றலை, கிரேக்கர்கள் சற்று அதிகமாகவே பெற்றிருந்தார்கள் போலும்.

அக்காலத்தில் அத்தகைய கதைகள் ஆனந்த உலகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் இது போன்ற மாயாஜாலக் கதைகள் நம்மை ஒரு புதிரான, புரியாத புதிய உலகிற்குத்தான் அழைத்துச் செல்கின்றன. இத்தகைய வீரக்கதைகள் சில சமயங்களில் நமக்கு கோரக் கதைகளாகவும் தெரிகின்றன.