பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

57


ஓட்டத்தைத் தொடங்கி வைக்க இப்பொழுது விசில் அல்லது துப்பாக்கி வெடிச் சத்தத்தைப் பயன்படுத்துகின்றார்கள். அந்தக் காலத்தில், விசிலோசைக்கும் வெடியோசைக்கும் பதிலாக, முரசத்தைப் பயன்படுத்தினார்கள், முரசம் முழங்கினால் ஓடவேண்டும் என்ற விதிக்கேற்ப வீரர்கள் ஓடி வெற்றி பெற்றார்கள்.

வீரர்கள் ஓடிய வேகத்தையும் நேரத்தையும் குறிக்க, இன்றுபோல் அன்று நிறுத்துக் கடிகாரம் (Stop watch) இல்லை. ஆகவே, ஓட்ட நேரத்தை, முயல் ஓடியது போல வேகமாக ஓடினான், குதிரைபோல விரைவாக ஓடினான் என்பதற்காக, முயல் வேகம், குதிரைவேகம் என்று கணக்கிட்டுக் கொண்டனர். இவ்வாறு நடத்திய முதல் ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற முதல் வீரனின் பெயர் கரோபஸ் என்பதாகும்.

ஒரே ஓட்டப் பந்தயம் என்று இருந்தது 13வது ஒலிம்பிக் பந்தயத்தில் மாறியது. ஓட்டத்தின் எல்லையைப் பல அளவுகளில் நிர்ணயித்து, பல பிரிவுகளாக்கி, அவற்றிலே போட்டிகள் நடத்தினர். இதனால், பந்தயங்கள் நடக்கும் நேரமும் அதிகமாகியது. இளைஞர்களுக்கு ஓட்டப் பந்தயம், அத்துடன் குத்துச்சண்டை, மல்யுத்தம், தட்டெறிதல், தேரொட்டப் போட்டிகளும், ஒலிம்பிக் நிகழ்ச்சிகளில் சேர்ந்துகொண்டன.

காலம் செல்லச் செல்ல, நிகழ்ச்சிகள் கூடலாயின, 76வது ஒலிம்பிக் பந்தயங்களின்போது, போட்டி நிகழ்ச்சிகள் பெருகிப் போகவே, நடத்துகின்ற நேரமும் மாறிக்கொண்டே வந்தது. போட்டி நிகழ்ச்சி எப்பொழுது நடைபெறுகின்றது என்பதை நிர்ணயிக்க முடியாததால், இரவு நேரங்களில்கூட நடத்துகின்ற நிலை ஏற்பட்டது. அதனால் போட்டியாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க அந்நிலையே காரணமாயிற்று, பகல்