பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

{{rh||24|}


கூறப்படும். இங்கு இரண்டு ஆண்டு பயிற்சிபெற வேண்டும். இந்த இரண்டாண்டில் கூலி உழவர்களோடு மறைமுகமாகப் பழகிவர ஏற்பாடு செய்வர். இவ்வாறு பழகியே இரண்டாயிரம் கூலி உழவர்களைத் தம் வசமாக்கினர் என்பது அறிய வருகிறது. இக்கூட்டத்தின் நோக்கத்தை ஒரு சிலரே அறிவர். இதுவே அவ்விரகசியக் கூட்டம் செய்து வந்த பணியாகும்.

பெரியவரானதும் பெற்ற பயிற்சி

இவர்கள் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்டு வந்த காலத்தில் பெற்ற ஒழுங்கு நடத்தை, மனிதராக மாறியகாலத்திலும், தொடர்ந்து நற்பயன் அளித்தது. உணவு கொள்ளும் முறை எவ்வாறு ஒன்றாக நடந்து வந்ததோ, அவ்வாறே உடற்பயிற்சியும் முறையாக எல்லாருக்கும் ஒன்றாகவே நடந்துவந்தது. இதனால் இவர்கட்கிடையே தோழமைப் பண்பு ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஊடுருவி வளர்ந்து வந்தது. ஸ்பார்ட்டா மக்களின் உடையும் உணவும்

இவர்களின் உடைகளும் உணவுகளும் எளியனவாகவே இருந்து வந்தன. ஓர் உடை தரித்தே உலவ வேண்டியிருந்ததால், ஆடை அழுக்குப் படிந்ததாய் இருந்தது. உணவு சுவையின்றி இருந்தது. இவர்கள் பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்து வைக்கவேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர்கள், கூடுவிட்டு இங்கு ஆவி தான் போனபின் அப்பணத்தை யார் அனுபவிப்பவர் என்பது அவர் நினைவு. வாணிகத் தொழிலையும், இவர்கள் மேற்கொள்ள விரும்பவில்லை. அதனைத் தம் தலைநகர்க்கு வெளியே வாழ்ந்த ஒரு