பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26


முறை பழக்கத்திற்கு வந்தது. ஆனால், எய்யும் போர்க் கருவிகளில் யாதொரு மாறுபாடும் ஏற்பட்டிலது. தலை கை கால்களில் அணிய வேண்டிய போர் உடைகளைத் தரித்தே இருந்தனர். ஆனால், பண்டை முறையில் இருந்த ஈட்டி போன்ற படைக் கருவி மேலும் சிறிது மாறுபாடுற்று, மாவீரர் பயன்படுத்தத்தக்க ஆறடி நிளமுள்ள ஈட்டியாகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. வீரர்கள் அணியணியாக நிறுத்திப் பழக்கப்பட்டு வந்தனர். போர் வீரர்கள் தம்மைக் காத்துக் கொள்ளவும், எதிரிகளைத் துரத்திப் போரிடவும் இருந்தமையால், தம்மால் சுமக்க வொண்ணாக் கருவிகளைத் தாங்கி இருந்தனர். இதனால், இவர்கள் நிலத்திலிருந்தே போர் புரிய வேண்டியது இன்றியமையாததாயிற்று.

இந்நிலையில் மலைச் சரிவில் இருந்து போர் புரிய நேர்ந்ததால், அவ்வளவு கனமுள்ள பொருளைச் சுமத்தல் இன்றி எளிதான இலேசான வில்லும் நாணும் மட்டும் ஏந்தியிருக்க வேண்டிய வராயினர். இவர்கள் காலாட் படையினராக இருந்தனரே அன்றிக் குதிரைவீரர் என்னும் நிலைமை எய்த அறியாதிருந்தனர். குதிரை வீரராயின் அதன் மீது இருந்து போர் புரிவதற்கு தன் முறையில், பயின்றிருக்கவேண்டுமன்றோ? கிரேக்கர்கள் தம்போர் முறையைப் பண்டைத் தம் முன்னோர் எம்முறையில் மேற்கொண்டு வந்தனரோ, அம்முறையிலேயே நடத்தி வந்தனர். இது பரம்பரைக் குணமாக இவர்களிடம் அமைந்திருந்தது என்றாலும், இம்முறை சிற்சில சமயங்