பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

தம் கருத்தை அறிவிப்பதற்கு முன் நன்கு சிந்தித்து ஆயத்தம் செய்து கொண்டிருப்பர். சாதாரண உறுப்பினனாகச் சேர்ந்தவன் நாளடைவில் செயற்குழு உறுப்பினனாக மாறிச் சபைக்குத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பும் பெறக் கூடியவனாவான். இந்தத் தலைமைப் பதவியை எல்லோரும் முறையாகப் பெறுவர். இதிலிருந்து அரசியல் நிர்வாகத்தில் சிறிய பணியை ஏற்றவர் நாளடைவில் பெரிய பதவி பெறும் வாய்ப்பு இருந்தது என்பதை நாம் உணர்கிறோம்.

சிலர் ஜெனரல் என்னும் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பல பொறுப்புக்களை மேற்கொள்வர். நாட்டுப் பொருளாதாரத்தொடர்புடைய செயல்கள் அனைத்தும் இவர்கள்கையில்தான் இருக்கும். போர்க் காலங்களில் இவருக்கென ஒருதனிப் படையும் கொடுக்கப்படும். ஒவ்வொரு கொன்சிலர் ஆகிய உறுப்பினர்களின் வேலை இன்ன என்பதையும், பல்வேறு பொறுப்புக்களை ஆற்றவேண்டு மென்பதையும் உணர்த்தி, ஒழுங்காக அரசியல் நிர்வாகத்தை, நடத்திவருவர். ஆனால், ஜெனரல் பதவி வகிப்பவர் பொறுப்புக்கள் மட்டும் பொது மக்களின் தேர்தல்படி ஏற்றுநடத்தப்படும். ஆகவே இந்த ஜெனரல் பதவிக்கு வருபவர் பலரை அறிந்த வராகவும் தம் மதிப்பை நன்கு பலர் அறியச் செய்த வராகவும் இருக்கவேண்டும்.

அரசியல் நிர்வாகத்தை நடத்துவதற்குச் செல்வரிகளும் முன் வரலாம். கடைகளைக் கண்காணிக்கும் தொழிலையும் கப்பல் துறைமுகங்களைக் கவனிக்