பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
69

தனக்குச் சொந்தமாகக்கொண்டு அதனை உழுது பயிரிட்டு உண்டுவந்தனர். ஏதென்ஸ் நகர மண் வளம் விளைவுக்கு அத்துணைப் பொருத்தமான தன்று. ஆதலின் அவர்கள் உழைப்பில் முழுப்பங்கு இலாபம் அடைய இயலாமல், மூன்றில் ஒரு பங்கு அடைந்துவந்தனர். அவர்கள் உழுத பயிரை ஏப்ரல், மே, சூன் மாதங்களில் அறுவடை செய்து வந்தனர். அவர்கள் பயிரிட்ட முறையும் தானியம் பெற்ற முறையும் நம் நாட்டு முறைக்கிணங்கவே இருந்தன. நெற்களத்தில் நெல்லரியைப் பரப்பி, அவற்றின் மீது எருதுகளை விட்டுத் தெழிக்கச் செய்தனர். முறத்தைக்கொண்டு பதர் வேறு, நெல் வேறு பிரியத் துாற்றி வந்தனர்.

நெற்கதிர்களைப் பயிரிட்டு வந்ததுபோல், ஒலிவ மரங்களை வைத்து வளர்த்து வந்தனர். இந்த மரங்களை பயனளிக்கப் பதினான்கு ஆண்டுகள் ஆகும். இவற்றினின்று பொரி பழங்களைப் பறித்தும், அவற்றினின்றும் எண்ணெய் எடுத்தும் வந்தனர். இவர்கள் எண்ணெய் எடுத்த விதம், இக் காலத்தில் பெரிய கட்டடம் கட்டுவதற்காகச் சுண்ணும்பும் நீரும் மணலும் கலக்க ஒரு வட்டம் அமைத்து, அவ் வட்டத்தின் இடையே சுற்றிலும் பள்ளம் செய்து, பெரிய வட்டமான கல் சுழன்று வரும்படி செய்து, சுண்ணம்பைக் கலப்பது போலாம். நாம் இக்காலத்தில் செக்கில் ஆட்டி எண்ணெய் எடுப்பது போன்றதன்று திராட்சையும் இவர்கள் பயிரிட்டு வந்த பொருளாகும். இதிலிருந்து திராட்சைச் சாறு எடுத்து வந்தனர்.