பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77


அறுப்பு முறையில் நோய் நீக்கும் முறையும் நடைமுறையில் இருந்தது. ஆனால், அதுவும் திருந்திய முறையில் செய்யப்பட்டது என்று கூறுவதற்கில்லை அறுப்பு முறைச் சிகிச்சையும் பண்டும் இன்றுமுள்ள சிகிச்சை முறை போலும் ! இன்றேல்.

‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல்’

என்று குலசேகரரும்,

கருவியிட்டாற்றுவார் புண்வைத்து மூடார் பொதிந்து

என்று குமரகுருபரரும் கூறுவரோ ?

உடற் கூற்றை நன்கு கவனித்து இன்னின்ன பாகங்கள் இவ்விம் முறையில் அமைந்துள்ளன என்பதை இறந்த ஓர் உடலைச் சோதித்து, அறிவதற்கான வாய்ப்பு அந்நாட்டில் இல்லை. ஏனெனில் இறந்த உடலை சுட்டெரித்து வந்தனர். அலெக்சாண்டர் கீழ்த்திசை நாடுகளைக் கைப்பற்றி வெற்றி கொண்ட பின்னரே ஈஜிப்த் தேசத்தில் உடல் உறுப்புக்களை ஆய்ந்து பார்க்கும் முறை நடைமுறையில் கையாளப்பட்டது என்னலாம்.

கைத்தொழில்கள் பெரிதும் ஏதென்ஸ் நகரில் பரவி இருந்தன. கிரேக்க நாட்டில் நகர்ப் புறங்களில் களிப்பு மண் நிரம்ப உண்டு. இம்மண் பாத்திரங்கள் செய்யப் பெரிதும் பயன்பட்டது. இதனால் குயவர் பணி பெரிதும் அந்நாளில் பயனுடைய பணியாக இருந்தது எனலாம். இப்பணியின் மூலமே குடி நீர்க் குவளைகள், சட்டிகள், ஜாடிகள், மற்றும் குடும்பத்திற்கு வேண்டிய சாமான்கள் செய்யப்பட்டன. இந்தப் பொருட்கள் அப்படியே பயன்படுத்தப்படா