பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

திருடன்போல் மணவாளன் திடுமென வருவார்.
தெரிந்து கொண்டவருக்கே திகழ் பரந்தருவார்
கருடன் கண்டபணிபோல் கலங்குவர் மருவார்
காலமெல்லா மவர்: நிக்கிரகம்
கல்லு முருகும்எரி நகரம்துயர்பெருகும்.

 

46
கிறிஸ்துவை வேண்டுதல்.
காப்பி --ஏகம்.

மகிதலத் தனில் வந்த மனுவேலா-பெரு
மாபாவி. களுக்கோர் அனுகூலா
மறமதை வெறுத்தே
திறமுடன் பொறுத்தீர்

மலைமிசை திகழ்வரு மறுரூபா-மன
மாயாதி கடந்த மகதேவா
மரமுதல் இறந்தே
பரமதில் சிறந்தீர்

மகிமையில் வருமெழில் மணவாளா- என்றும்
மாறாத தரும குணசீலா
மகிழ்பரந் தருவீர்
புகழ்பெருந் திருவீர்

 

47
கிறிஸ்துவின் 2ம் வருகை.
'ஓலமிட்ட சுரும்பு' என்ற மெட்டு.
சந்தக் குழிப்பு.

தான தனன தன தனாதனாதன
தான தனன தன தனாதனாதன
தான தனன தன தனதனாதன தனதான

பாதியிரவு புயல் பளீர் பளீர் என
மீது கடவுபர மகா மகா முன்
மோது முறைமை வரு களா களா வென அமரரோடே