பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தகுதிகள் கொண்டே இருப்பார்கள். அடிக்கடி டைவர்ஸ் அதுதான் இந்தத் தொழிலின் அடிப்படை' என்று கூறுகிறான். அவன் தெரிந்து வைத்திருப்பது வியப்பாகவே இருந்தது. "எப்படிச் சொல்லுகிறாய்?" - 'நீங்கள் கொடுக்கிற சம்பளம் போதாது; இதைவிட அதிகம் கிடைத்தால் விட்டு விடுவோம். இதுதான் எங்கள் பழக்கம். சம்பளம் குறைவாக ஆள் கிடைத்தால் எங் களுக்கு 'டாட்டா சொல்வீர்கள்' அவன் உண்மையைக் கூறுகிறான் என்பது தெரிந்தது. 'உனக்கு எவ்வளவு தேவை?' "அதிகம் கேட்டால் வேறு ஆள் தேடப் போகிறீர் கள்; நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள். இப்போதைக்கு அது போதும்'. “என்னங்க அவன் சொல்றான்?" உள்ளிருந்து எழும்பிய குரல் அது. 'கொடுத்தது வாங்கி கொள்கிறேன்' என்கிறான். "அதுமாதிரி ஆள்தான் நமக்குத் தேவை என்று உள் மனசு பேசியது. தனியார் தொழில் சட்டங்கள் கொடுமையானவை. வேறு தொழில் கிடைக்கவில்லை; அதனால்தான் இவர்கள் தனியாரிடம் அடைக்கலம் புகவேண்டி இருக்கின்றது. 'கார் ஒட்டி இருக்கிறாயா?' அடுத்த கேள்வி. "லைசென்சு தந்து இருக்கிறார்கள்’’ 'பழக்கம்?’’ 'அதற்கு வாய்ப்பு இல்லை. இதுவரை பலரும் கேட்ட கேள்விதான். இதற்கு முன் எங்கும் வேலை செய்த