பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 97 அவள் சொல்வது சுவாரசியமாக இருந்தது. 'மற்று யாரும்?' 'ஒரு பெண்; அவளும் எனக்குத் தொந்தரவு தரவே இல்லை. ஒருத்தன் கிடைச்சான். அவன் கூப்பிட்டான். கூடவே போயிட்டாள்' எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் சுபாவம் வியப்பைத் தந்தது. 'உன் கை சுத்தமாக இருக்குமா?” 'உள்ளே வரும்போது சுத்தமாகத்தான் இருக்கும். போகும்போது சொல்ல முடியாது. சில்லறை ஏதாவது நீங்கள் மறந்து வைத்துவிட்டால் எடுக்காமல் இருக்க முடி யாது. அது என் பழக்கம்” என்று நாப் பழக்கத்தில் கூறுகிறாள். இவளை வேலைக்கு வைத்துக் கொள்வதா இல்லை யா. இவனால் முடிவு செய்ய இயலவில்லை. இடைக் காலத் தீர்ப்பாக அவளை ஏற்பது இல்லை என்று முடிவு எடுக்கிறான். இறுதித் தீர்ப்பு உச்ச நீதி மன்றத்துக்கு என அவன் விட்டு வைத்தான். அடுத்தது கார் ஒட்டி' என்று ஒரு புது வேட்டி காத்திருக்கிறது. 'உனக்குக் கலியாணம் ஆகிவிட்டதா?” 'அந்த ஆசை இப்பொழுது இல்லை' 'அப்படி என்றால்?” 'இந்த உத்தியோகம் அதை நம்பிநான் கலியாணம் செய்து கொள்ள முடியாது.' 'இது தற்காலிகமானதா?” 'அப்படித்தான்; யாரும் எந்த டிரைவரையும் நிரந்தரமாக வைத்துக் கொள்ள மாட்டார்கள்; மாற்றிக்