பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ஈடு ஆகாது 16 சடு ஆகாது மழை; அது பெய்ததன் வடு, வீட்டு முன் நீர்மடு; அதன் கீழ் சாணத்தின் குழம்பு, வாழைப்பழம் போல் அது வழுக்கி விடும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு முன் அவனுக்கு ஒரு அழைப்புக் கிடைத் தது; கார் ஒசி லிஃப்டு; அதை அவன் ஏற்க மறுத்தான். அதற்குக் காரணம் அவன் பணக்காரனை வெறுத்தான். ஏன் அந்தக் கார் லிஃப்டு கிடைத்தது; அதனை கிஃப்டு ஆகக் கருதி இருக்கலாம்; தவறிவிட்டான். 'சுக வாழ்வினருடன் சகவாசம் கூடாது; அவர்களை மதிப்பது ஆகிவிடும்' என்ற கருத்து; அதனால் ஏதோ அதை ஏற்கத் தயங்கினான். இந்தப் புத்தி அவனுக்கு எப்படி உண்டாகியது? அவன் காந்தீயவாதி. அதோடு கூடுதலாகப் பொதுவுடமை வாதம். அன்று அவன் அந்தக் காரில் ஏறி இருந்தால் இந்த வழுக்கல் நேர்ந்திருக்காது. 'வழுக்கினால் என்ன? கால் ஏன் முறியவேண்டும்? அவனால் நம்பவே முடியவில்லை. அது முறிவு அல்ல என்ற திமிர் அதுவும் உடன் சேர்ந்தது.