பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 101 கால் எலும்பில் அமைந்தது; அதற்கு வலிமை நரம் பும் சதையும் தான். அது மரக்கட்டை. அவை எலும்பைக் காக்கத் தவறிவிட்டன. அன்று கூவி அழைக்கும் ஆற்றல் இழந்தான்; 'கால் முடமாகியது' என்று தெரிவித்தார்கள். இந்த உலகம் அவனுக்கு இருட்டு ஆகியது. நல்லதோர் வீணை அது நலங்கெடப் புழுதியில் எறியப் பட்டது. என்ன செய்வது? அன்று அவன் பேனா பிடித்தான். அது அவனுக்கு ஊன்றுகோல் ஆகியது. இன்னும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறான். கால் அறுவை சிகிச்சை செய்தவன் அவன் செய்த தவறு. கோணல் அவனால் நடக்க முடியவில்லை. நடிகை ஒருத்தி பாவம் அப்படித்தான் தவறான சிகிச்சை. அதனால் லாப நஷ்ட கணக்குப் போட்டாள். தன் கால் அசைந்தால் அவற்றை ஈட்டி இருப்பாள்; கற்ற கலை காற்றோடு கலந்து விட்டது. அவள் எதிர்காலம் மூடுபனி ஆகிவிட்டது. வழக்குத் தொடுத்தாள். 'மருத்து வர் செய்த சிகிச்சை மகத்துவம் அற்றது. பிழைபடச் செய்ததால் இழைக்கப்பட்டது கொடுமை' என்று அவள் வழக்குத் தொடுத்தாள். அவள் நிழற்படத்தைத் தொலைக்காட்சியில் காட்டி னார்கள். மருத்துவம் தோற்று விடுகிறது; அவர்கள் கைத் திறன் சில சமயம் எழுத்தாளன் எழுதும் சில கதைகள் போல் தோல்வி அடைகின்றன. இவன் காலும் இந்தக் கதிக்கு ஆளாகிவிட்டது. நடை கற்காத குழந்தை தட்டுத் தடுமாறி நடக்கிறது. பெரியோர் வாய் மொழிகள் போல் தண்டு அவனுக்கு ஊன்று கோல் ஆகியது. நீளமான உலகத்தை விட்டு அவன் சுருக்கமாக