பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 105 காதல் செய்யவே வாய்ப்பு இல்லை. முதல் சந்திப்புக் கூட ஒரு சடங்குதான் இன்பம் காண அவன் தள்ளப்படுகிறான். அதற்கப்புறம் வேகம் தலை கொள் கிறது. தாகம் தீர்கிறது. இனிதாகப் பேசி மெல்லச் சுவைக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது என்று கூற முடியாது. பசும்புல்லை மேய்கிறது கிழட்டுப் பசு, பசும் புல்லை வாயில் தடவிக் கடிக்கிறது. இதுதான் காமம் என்று எங்கோ படித்த நினைவு. சோறு உண்பது அதில் சுகம் இருக்கிறது. வாயில் ஒன்றும் பாதியுமாகப் போட்டுத் தின்றுவிட்டு நீரை மொட மொட என்று குடிக்கிறான். அவன் தாகம் அடங்குகிறது. பசி நீங்குகிறது. ஆனால் சுவை காண்பதில்லை. மெல் வதில்தான் சுவையே உள்ளது; அதை நினைத்துப் பார்க்கிறான். வட்டமான மேஜை, திட்டமான கையிழந்த நாற் காலிகள். விரித்த வேட்டிகள்; பிரித்த தட்டுகள்; சிரித்த முகங்கள்; கலகலப்பு: கைகளில் எடுப்பது இல்லை; கரண்டி மெல்ல எடுத்துச் சுவைக்கிறார்கள். பேசிக் கொண்டே உண்கிறார்கள். இதில் சுகம் இருக்கிறது; சுவை கூடுகிறது. அந்தச் சுகத்தை அவன் புதிதாக நாடுகிறான். 'வா! புறப்படு கடற்கரைக்கு' என்கிறான். அவளுக்கு விளங்கவில்லை. 'நம்மைத் தவறாக நினைப்பார்கள்; காதலிக்க வந்தோம்' என்று கருதுவார்கள். 'அதற்குத்தான் போகிறோம். உன் ஒத்துழைப்புத் தேவை என்கிறான். காதலிக்கக் கடற்கரைக்குத்தான் போகணுமா?’’