பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மாற்றம் 'அங்குதான் போகிறார்கள்; காற்று வாங்கிக் கொண்டு கதைகள் பேசலாம். வீட்டுச் சண்டைகளை விவாதித்து ஆற்றிக் கொள்ளலாம்.' "வேர்க்கடலை விற்பார்கள் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்' என்று அடுக்கிக் கூறுகிறான். 'இதற்காகவா அங்குப் போகணும்?" 'நான் வறுத்துத் தருகிறேன்' 'ஐஸ்கிரிம்' 'அங்கு மட்டமானதாகத்தான் இருக்கும். இங்கேயே வரவழைக்கலாம்' 'அப்படியே பீச்சுக்குப் போயிட்டு, டிரைவ் இன்; பிறகு ஒரு படம்' 'இந்த மூணும் எப்படி ஒரே நாளில் முடியும்?” 'அப்படித்தான் போகணும். அதிலே ஒரு திரில்' இருக்கு புறப்படு' 'பிள்ளைகள்?" - 'இருவர்; அவனுக்கு அவள்; அவளுக்கு அவன்; இரண்டு பேரும் நிம்மதியாகச் சண்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள்; கவலைப்படாமல் இரு' காதல் பண்ணணும்னு ஆசை. அதற்கு இடமே தரமாட்டியா சே! நீ” "ஆமாம்; நான் வரலை; இந்த வயசிலே உங் களுக்குக் காதல் கேட்குதா? ' அவள் கொடுத்த சூடு அவனுக்கு ஆறவே இல்லை. ஏன் காதல் செய்யக் கூடாது? என்ற வினா அவனை அரித்துக் கொண்டே இருந்தது. அவனால் வேறு எதையும் செய்ய முடியவில்லை.