பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 107 "ஏன்டா எங்கேயும் வெளியே போகலையா?” 'போகணும்தான் நினைக்கிறேன்; எங்கே போற துணுதான் தெரியலை' "அப்படியே! கடற்கரைக்கு சினிமாவுக்கு' என்று வந்தவன் கூறுகிறான். அவன் பால்ய நண்பன்; அவன் கலியாணம் பண்ணிக் கொள்ளவே இல்லை. அந்தச் சுகத்தை இப்படிப் பேசிப் பேசியே காண்பவன் போல நடந்து கொண்டான். அதைத் தவிர இவன் வேறு அதிகம் பேசுவது இல்லை; அது சிலர் பழக்கம். 'ஜாலியா வீட்டிலே அவர்களை அழைச்சிட்டு எங்காவது போய் வரலாமே?' என்று மீண்டும் கூறு கிறான். 'எனக்குப் பழக்கம் இல்லை; இது எல்லாம் ஆரம் பத்திலேயே இருக்கணும்; “இப்ப முடியவில்லை” "அவர் என்ன சொல்றாரு?" "பீச்சுக்குப் போ உன்னை அழைச்சிட்டுப் போ' என்கிறான். 'நீங்க என்ன சொன்னிங்க?" 'எனக்குப் பழக்கமில்லை' என்று சொல்லி விட்டேன் "விடுங்க நாம் போறோம்; போகத்தான் போகி றோம்.' 'குழந்தைகளையும் அழைச்சிட்டுப் போறோம்; முறுக்கு சீடை இவற்றோடு' என்று முளைத்தாள்; உடன் தண்ணிரும் பாட்டில்களில் எடுத்து வைத்தாள்.