பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நிம்மதி அவள் சாய்ஸ்: T3 நிம்மதி அவள் 'சாய்ஸ்' “ஹலோ எப்படி இருக்கீங்க?" 'தெரியாது; கண்ணாடி பார்த்துத்தான் சொல்ல முடியும்' 'அதெல்லாம் இல்லை. உடம்பு தொழில் பசங்க?" 'அதுவா, உடம்பு இருக்கிறது; தொழில் நடக்கிறது; பசங்க பறக்கிறாங்க' என்று பதில் சொல்கிறார். வந்த நண்பர் தன் வரலாற்று விவரங்களை இந்தப் பீடிகையில் தொடங்கித் தொடர்கிறார். 'கேக்கறாங்க, யோசிச்சிகிட்டு இருக்கேன்; என்ன பதில் சொல்றதுணு தெரியலை.” | 'பெண்ணைப் பற்றித்தானே, அது அது விதிப்படி தான் நடக்கும். நம்ம கையிலே எதுவும் இல்லை” என்று இவர் பதில் சொல்கிறார். இவர் கையில் ஒரு பேனா இருந்தது. அவர் பொய் சொல்லி இருக்கிறார். அந்தப் பேனாதான் பதில் சொல்ல வேண்டும். என்ன சொல்லுவது? "பையன் படிக்கலை; சுமாரப் படிச்சிருக்கான். வீடு கட்டித் தர்ரான். கோடிக் கணக்கில் புரள்றான். ஆனால்!”