பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 கிளிஞ்சல்கள்

  அவள் மங்கலமாகக் காட்சி அளித்தாள். பட்டுப் புடவை தவிர அவள் துட்டுக் கொடுத்து வேறு எதுவுமே வாங்கியது இல்லை. அது அவளுக்குத் தேவைப்பட்டது.
  மற்றவர்களைவிட அவள் கோயில் அர்ச்சகர்க்கு அதிகம் தந்தாள். அதனால் அவன் கூடுதலாகப் பூச்சரம் தந்தான்; அவள் வெளியே வரும்போது தாலிச் சரத்தோடு அதுவும் சரிந்து அழகு செய்தது.
  கட்டிய தாலி அவள் கழற்றியது இல்லை. அது அவளுக்குத் தேவைப்பட்டது.
  வைரக் கம்மல் ஒளி அவளைத் தனித்துப் பிரித்துக் காட்டியது. அதன் விலையைக் கேட்டு விசாரித்தவர்கள் பலர், வாங்கும்போது இருந்த மதிப்பு இப்பொழுது கூடிவிட்டது. இரண்டையும் அவள் தவறாமல் கூற நேர்ந்தது.
  வசதி இருந்தது; கார்கள் புதிதாக உற்பத்தியாகி வெளிவருகின்றன புதிய திரைப் படங்கள் போல; காரை அவள் அடிக்கடி மாற்றி வந்தாள். ஆளை மட்டும் அவள் ஒரே ஒரு முறைதான் மாற்றினாள்.
  அந்தப் புதிய ஆள் அவன் அவளுக்கு வேண்டியதை வாங்கித் தந்தான்; கணக்கில் வராத பணத்தை அவன் அவளுக்குக் காணிக்கையாக்கினான். அவன் உபரிப் பணத்தை அவன் தன் உபரி மகிழ்ச்சிக்கு அவளுக்குக் கொடுப்பதில் சிரமம் இல்லை; வருமான வரித் துறைக்குத் தருவதைத் தரும காரியத்துக்குச் செலவு செய்தான்.
  அவன் வருவது போவது அவளுக்குத்தான் தெரியும்; மற்றவர்களுக்கு அவன் விளம்பரம் ஆவது இல்லை; நீலக் கண்ணாடி அவன் வருவதை அவன் காரில் மறைத்தது. கண்களுக்கு அணியும் நீலக் கண்ணாடியைக் காருக்கே பூட்டிவிட்டான். அது அவனுக்குக் குளிர்ச்சி