பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



124

அறிமுகம்



ஏனைய நூல்களை இவர் வெளியிட்டதைப் போல இதையும் வெளியிடுவது என்று தீர்மானிக்கிறார்.

"இந்த நூல் தன்னைத்தானே அறிமுகம் செய்து கொள்ளும்; அறிமுகம் தேவை இல்லை” என்று சில வரிகளைத் தன் முன்னுரையில் சேர்த்து வெளியிட்டார். வாசகர்களின் விமரிசனமே ஒரு நூலுக்கு அணிந்துரை என்பது அவர் கருத்தாக அமைகிறது.

21

இணைக் கல்வி

"சற்றே விலகியிரு" “என்னப்பா சந்நிதானம் மறைக்குதா?”

அதை மறுபடியும் இன்று சொல்கிறான்; "சற்றே விலகியிரு; இல்லாவிட்டால் விலங்கு இட்டு மரியாதை யாக இழுத்துச் செல்வார்கள்".

இனிமேல் குளிர்காய முடியாது; அருகில் சென்றால் சுட்டு விடும். காக்கி சட்டை காலர் சட்டையை இழுத்துப் பிடிக்கும் "புதுக்கடி" வந்திருக்கிறது. இப்படி இள வட்டங் களுக்குள் கருத்துப் பரிமற்றங்கள் நடைபெறுகின்றன.


"காக்கி பேண்ட்" இன்று அவசியத்துக்காக "ஜீன்ஸ் பாண்ட்" அணிகிறது. ஏற்கனவே கட்டி வைத்தமுடி அது தொழிலுக்காக; அது இப்பொழுது எழிலுக்காக.

கல்லூரிக்குக் காசு தந்து சேர்ந்தது இல்லை. இன்று இந்தச் சட்டை கல்லூரி மாணவி; நங்கையர் கல்லூரி முன்