பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 125 அங்கையில் கிழிந்த புத்தகங்கள் அவற்றின் உள்ளிடு கேஸ் குறிப்பு டைரி. மெய்ப் பொருள் நாயனார் கதையில் முத்த நாதன் கையில் ஆகம ஏடுகள்; உள்ளே அவன் மறைத்து வைத்திருந்தது கொடுவாள்'. இது பழைய கதை. இந்தக் காக்கி சட்டை அவள் கையில் இருந்தது கம்ப்யூட்டர் புத்தகம்; நாளை இவள் ஒரு பொறியியல் இன்ஜினியர். - இந்த பஸ்ஸில் ஏன் இந்த நெருக்கடி; இந்தப் பெண் போலீசு இவர்கள் இடம் பிடித்துக் கொள்வதால். இந்த ஜீன்ஸ் உடை சில ஜெண்ட்சுகளை இழுக்கின்றது. மெல்ல அவன் அவளை நெருங்குகிறான். அவளும் பெண் தானே! காக்கி சட்டையில் இருந்தால் அவள் ஹாக்கி கட்டை இப்பொழுது அவள் கிரிக்கெட் மட்டை வருகிற பந்தை அவள் அடிக்கக் காத்திருக்கிறாள். மெதுவகத் தொட்டான் அவள் துவள்வாள் என்று; அவள் பாய்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. கழுத்தில் அவள் கைவைத்தாள்; அந்த அழுத்தத்திலிருந்து அவனால் விடுபட இயலவில்லை. இந்த அனுபவங்கள் தாம் அவர்களை நந்தனார் கீர்த்தனையைப் பாடவைக்கிறது. "சற்றே விலகி இரு பிள்ளாய்' என்று இன்று பாடுகிறார்கள். காலம் மாறுகிறது: இது இளவட்டங்களின் மாநாடு; அவர்கள் தீர்மானங்கள். "சார் இனிமேல் காதல் கதைகள் படமே எடுக்க முடியாது”. இந்தப் பேச்சு காதல் படம் தவிர வேறு எந்தப் படமும் வெற்றி தராது என்ற நம்பிக்கையில் கொட்டிக் கொடுக்கும் உற்பத்தியாளர் வட்டத்தில் பேசப்படுகிறது. "ஏன்' 'காதல் கதைகள் இவற்றின் காதல் தொடக்கமே கல்லூரி வளாகம் தானே! ஈவ்டீசிங் இது இப்பொழுது