பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தூண்டுதல் விட்டது; கவலை இல்லை; அந்த உயர் செருப்பைத் துக்கி எறிந்துவிட முடியும். மருத்துவம் முன்னேறிவிட்டது. சதை பெருத்து இருந்தாலும் அறுத்துக் குறைக்கிறார்கள். மூக்கு அதைச் சரிப்படுத்த பூரீதேவிபோல் அறுவைச் சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாம்; சதை யை அறுத்து ஒட்டிச் சரி செய்துவிடுகிறார்கள். மூக்கும் முழியுமாக ஒரு பெண் இருக்க வேண்டும் என்பது இல்லை. எல்லாவற்றிலும் மருத்துவம் வளர்ந்து விட்டது. 'அவனிடம் இவர் பேச்சுக் கொடுத்தார், என்ன எப்படி? தேன் நிலவுக்கு விடுமுறை?” 'பால் நிலவு' என்று பதில் கூறினான். 'என்னப்பா! என்ன? எங்காவது போய் வந்திருக்க வேண்டும்; முன்னாலேயே 'புக் செய்திருக்க வேண்டும்' என்று அனுபவ உரை தந்தார். 'அவளைவிட நான் தேர்வில் மதிப்பெண் குறை வாகப் பெற்றிருக்கிறேன். அவள் முதல் மதிப்புப் பெற்ற வள்; என்னை மதிப்பது இல்லை' என்று குறைபட்டுக் கொண்டிருந்தான். 'இது ஒரு குறையா எப்படியும் நீ ஆம்பளை! உனக்கு என்னப்பா குறைவு?” 'அவள் கண்களுக்கு நான் மன்மதனாக இருக்கிறே னாம். அது அவள் டேஸ்ட்டுக்குப் பிடிக்கவில்லை.” 'இது என்னப்பா புதுசா இருக்குது; உன் அழகுக்கு என்ன குறைவு?” "அதை அவள் மதிக்கவில்லை; படிப்பில் சற்று மதிப் பெண் குறைத்து வாங்கி இருக்கிறேன். சர்ட்டி பிகேட்டு ஒப்பிட்டுப் பார்த்தாள். அதனால் வந்த வினை' என்றான்