பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 139 'இப்பொழுது என்ன ஆயிற்று? நீ அவளை நேசிக்கிறாயா? அதைச்சொல் முதலில்’ "அவள் குள்ளமாக இருக்கிறாள். வெளியே போகும் போது உயர் செருப்பு; தெரிவதில்லை; தனியாக வீட்டில் இருக்கும்போது அவள் குள்ளம் அதனால் எனக்கு அவளிடம் அப்பீல்' உண்டாவது இல்லை” என்று அவன் புதுமையாகக் கூறுகிறான். 'இதை யாரிடம் முறையிடுவது? கிடக்கட்டும் சரி ஒற்றுமையாகக் குடித்தனம்?” 'வேறுபாடு வந்துவிட்டது. நடத்தமுடியாது; இரு வரும் விவாகரத்துக்கு மனு செய்து இருக்கிறோம்'. இவருக்கு இது வருத்தமாக இருந்தது. அன்று தான் மேடைக்கு ஏறி வாழ்த்தாததுதான் தவறு; வாழ்த்தி இருந் தால் இதற்குள் அவர்கள் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு பெற்றிருப்பார்கள். இனி எந்தக் கலியாணத்துக்குப் போனாலும் அவர் கள் தரும் அட்சதையைத் தவறாமல் கிட்டே சென்று அவர்கள் தலையில் விழுமாறு தூவுவது என்று முடிவுக்கு வருகிறார். இதுவரை அந்த அரிசியை முன்னால் இருந்தவர்கள் தலையில்தான் தூவி இருக்கிறார். வேறு என்ன செய்ய முடியும்? எழுந்தா மேடைக்குப் போக முடியும். மேடை அவருக்கு ஒரு அலர்ஜி. வழக்கின் முடிவுதான் என்ன? இவர்கள் மனத்தில் ஒரு கோளாறு; காம்ப்ளெக்ஸ்’ உயர்வு தாழ்வுகள் இவர் களைப் பிரித்து வைத்திருக்கிறது. தன்னினும் மற்றவர் தாழ்வு என்பது; மதிக்க முடியாமல் போகிறது; கவர்ச்சி' . 6o){D674زl5] Gھیے