பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தூண்டுதல் இவர்கள் தங்களை மானிட இனமாகப் பார்க்கிறார் கள். இவர்கள் மிருகங்களாக மாறினால்தான் உருப்படுவார் கள் என்ற எண்ணம் தோன்றியது. ஏதோ இப்படி ஒரு பைத்தியகார எண்ணம், இந்த மனுஷனே ஒரு பைத்தியம்தான். கண்டபடி எண்ணுவது; பேசுவது இது மற்றவர்கள் பார்த்துச் சிரிப்பதற்குக் காரணம் ஆகிறது. தனக்கு ஒரு சமூகக் கடமை இருக்கிறது என்பதை உணர்கிறார். அவர்கள் மனத்தில் புதிய எண்ணங்களைத் தோற்றுவிக்க வேண்டும். என்ன செய்வது? என்ன செய்வது; அவர்களுக்கு ஒரு விருந்து வைப் பது என்று முடிவு செய்கிறார். மற்றும் அந்த மணமக்களை மதித்து இதுவரை தன்வீட்டுக்கு அழைக்கவில்லை. இது அவர்களைக் கவுரவிக்கச் செய்யும் கடமை; அதைச் செய்யலாம். அன்று மேடையில் வாழ்த்துவதை மறந்தார். இந்த வரவேற்பு விருந்து தருவதைத் துறந்தார். எப்படியும் அவர்களை அழைப்பது என்று துணிவு கொண்டார். அவர்கள் வராவிட்டால் என்ன செய்வது? வீட்டில் ஒருநாள் சலசலப்புத் தேவைப்பட்டது; தன் வீட்டில் ஒரு விருந்து; தன் மனைவி சமைப்பதை அவர்கள் பாராட்டிக் கூறுவதற்கு ஒருவாய்ப்பு: இதுபோன்ற வாய்ப்புகள் தந்தால் இவர் மனைவிக்கு ஒரு பெரு மகிழ்ச்சி. அதற்கு இடம் தரவேண்டும். அதற்காகவாவது அவர்களை அழைப்பது என்பது தீர்மானம். விருந்து உண்டபின் சிரித்துப் பேச வேண்டிய கட்டம் வருகிறது. அந்த எழில் முகத்தை இவர் பார்க்கிறார். அது இவனுக்கு ஏன் தெரியவில்லை? வியக்கிறார். ஆண் அழகன், கட்டுக் கோப்பான உடம்பு கஷ்டப் பட்டுப் பல உடற்பயிற்சிகள் செய்து கொழுப்பைக்