பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 147 அவள் சொன்னாள். 'கண்ணதாசனைப் பின்பற்றுங் கள் எழுதினால் வெற்றி கிடைக்கும்' என்றாள். கவிஞன் ஆக முடியாது என்பதை உணர்ந்தேன். காரணம் இந்தச் சினிமாக்காரர்களால் கவிஞர்கள் உற்பத்தி மிகுதி என அறிந்தேன். வீட்டிலேயே இருந்து கொண்டு அறுக்க விரும்ப வில்லை; எங்காவது ஏதாவது எப்படியாவது என்று ஆவதற்கு உரிய வழிவகைகளைச் சிந்தித்தேன். லைட் பாயாக இருந்தவர்கள் எல்லாம் லைஃப்பாய் சோப்பில் விளம்பரம் ஆகிப் பின் படிப்படியாக முன்னணி நடிகர் ஆகிறார்கள். எமன் என்ற நடிகனின் பேட்டியைப் பார்த்தேன். கொலையாளி வேடத்தில் அவனை வெல் பவர் இல்லை என்பதால் இந்தப் பெயர் அவனுக்குப் படப் பெயர் ஆகிவிட்டது. "எங்கேயும் உள்ளே நுழைவதுதான் கஷ்டம்; பிறகு ஒட்டிக் கொள்ளலாம்' என்று அவன் பேட்டி கொடுத்து இருந்தான். . இந்த சினிமாத் துறை மதிக்காத ஒரு நபர் யார் என்று சிந்தித்தேன்; கதாசிரியன் என்பதை உணர்ந்தேன். அந்த இடத்துக்கு அதிகம் போட்டி இல்லை என்பதை அறிந் தேன். "கதாசிரியன்' என்றால் கழுத்தைப் பிடித்துத் தள்ளு வதைப் பார்த்திருக்கிறேன். கேட்டால் 'அறுவை'; அதனால் உள்ளே விடுவது இல்லை என்று காவல் கூர்க்கா சொல்கிறான். - பத்திரிகைக்குள் நுழைவது என்று தீர்மானித்தேன். 'பூனூல் இல்லை' உள்ளே நுழைய முடியாது என்று சிலர் சொன்னார்கள். "அனுமதி இல்லை" என்று எழுதி இருந்தது.