பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ராசியான பேர் 'ஆசிரியரைப் பார்க்க வேண்டும்” என்றேன். "அவர் மும்முரமாகத் தலையங்கம் தீட்டிக் கொண்டு இருக்கிறார்' என்று சொன்னார்கள். கோபம் வந்து விடுவிடு என்று கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தேன். அவர் உண்மையில் தலையங்கம் தீட்டுவதைப் பார்க்க முடிந்தது. மற்றும் சில அங்கங்களையும் அவர் கரங்கள் வருடிக் கொண்டிருந்தன. அதிர்ச்சி அடைந்தேன்; எழுதவில்லை. குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அவர் செய்கையை வைத்து அவரை மிரட்டினேன். 'எனக்கு இங்கு எழுத இடம் கொடு; மறுத்தால் உன்னை வைத்து எழுதி விடுவேன்' என்றேன்; விசுவநாதன் வேலை கொடு என்பது போல் இருந்தது இந்த மிரட்டல். பதறாமல் அவர் ஆரம்பத்தில் அச்சுப்பிழை திருத் தும் உத்தியோகம் தர ஏற்பாடு செய்தார். அச்சுப்பிழை திருத்தும் உத்தியோகம் தான், அங்கு வரும் கதைகளைப் படிக்க முடிந்தது. திருட முடிந்தது; பெயர்களை மாற்றினேன். தலைப்பைத் திருத்தினேன். தகிடுதத்தம் செய்தேன்; முடிவு நான் ஒரு சிறந்த சதை எழுத்தாளன் ஆக முடிந்தது. என் மனைவியிடம் இந்த ரகசியம் சொல்லவில்லை? "எப்படிங்க உங்களால் எழுத முடிகிறது' என்று கேட் டாள். அவள் என்னை ஒரு மேதை என்று முடிவு செய்து விட்டாள்.