பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிளிஞ்சல்கள் 13

2
உறைத்தது
    "நீங்கள் இதை வாங்கிக் கொள்ளுங்கள்" என்றாள் அவள்; அதில் வியாபாரம் மட்டும் இல்லை; உணர்ச்சிக் கலப்பும் இருந்தது.
    அவள் பின்னணிப்பாட்டில் ஒரு சோக கீதம் இருப்பதை உணர முடிந்தது.
    ஓரம் கட்டப்பட்டவள் என்பது அவள் சோர்வு காட்டியது.
    அந்தக் கதையைக் கேட்பதற்காகவாவது அவள் கட்டுக்களை அவிழ்ப்பதற்குச் சம்மதம் தெரிவிக்க நேர்ந்தது.
    கட்டியவன் அவன் உறவு வெட்டி இருக்கிறான் என்பது தெரிந்தது; தேய்ந்த பழங் கயிறு அவன் பழைய பந்த பாசத்தைக் காட்டியது.
    "அவர் எதிர்பார்த்ததை என்னால் கொடுக்க இயலவில்லை" என்றாள்.
    புதிரா புனிதமா என்ற தலைப்பு என்று இவர் எண்ணத் தொடங்கினார்.
    "வரதட்சணை என்று கேட்கவில்லை; கொடுத்திருக்கலாம்; அவர் நம்பிக்கைக்கு நான் பாத்திரமாக இருக்க வில்லை".
    விடுகதைபோல் இருந்தது.