பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 உறைத்தது 'அவர் ஒரு பிள்ளை பெற்றுத் தருவேன் என்று எதிர்பார்த்தார்; மூன்றும் பெண்கள்' என்றாள். 'யார் இவர்களைக் காப்பாற்றுவது? நீயே வைத்துக் காப்பாற்று போ என்று என்னை ஒதுக்கிவிட்டார்.' அவள் சொன்னதை இவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை; ஒரு சோகக்கதை தேவைப்பட்டு அதை அவள் சொல்லி முடித்தாள். அவள் இதில் இரக்க உணர்வைக் கூட்டி எழுப் பினாள். கதையைக் கேட்டுவிட்டு அவளை எப்படி அனுப்புவது? கடலை உருண்டை; பிரிட்டானியா இந்த விளம் பரங்களில் திணிக்கப்படும் பண்டமாற்றுகள் பாலிதின் பைகளில் போட்டு அதை ஒளிபெறச் செய்திருந்தாள். இனி மறுக்க முடியாது; அவருக்கு அவற்றில் விருப்பம் இல்லை, வீட்டிலிருந்தால் யாராவது தீர்த்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. மறுபடியும் அவளைப் பார்த்தார்; மத்திய தர வகுப்பு: அதாவது அவள் வயது பற்றிக் கூறப்பட்டது: பொறுப்புமிக்கவள் என்பது தெரிந்தது. படிதாண்டும் பத்தினிதான்; அவள் இப்படி வந்து சோர்ந்திருக்கிறாள் என்பதை அறிகிறார். - அந்த நடுத்தர வர்க்கத்திடம் இந்த மேல்தர மனிதர் உரையாடுவதை இடைத் தர மாந்தர் விரும்ப மாட்டார்கள். - அவர் வீட்டில் இந்த வசனங்களைக் கேட்டுக் கொண்டிருந்த 'வெகுசனம்' அதாவது அவர் துணைவியார் கண்டிக்கிறார். "என்ன அவளிடம் பேச்சு' இது அவள் வினா. 'வியாபாரம்: கொடுக்கல் வாங்கல்' என்று விளக் கம் தருகிறார்.