பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 165 அவள் கூந்தல் கண்ணகியைப் போல் விரிந்து கிடந்தது; வாரி முடிக்கவில்லை. 'உங்கள் பெயர் கண்ணகியா?' என்று துணிந்து கேட்டான். 'சொர்ணமுகி' என்றாள். 'இதுதான் உங்கள் பெயரா' என்று கேட்டான். & 4 பொன்னம்மா என்பது என் பெயர்; அதை மாற்றிக் கொண்டேன். நவ நாகரீகப் பெண்மணி' என்று விளக்கம் தந்தாள். 'பெண்மணி! நீ என் கண்மணி' என்று சொல்லி விட்டு நீங்கினான். அவனை அவள் விடவில்லை; கிடைத்த வாய்ப்பு; நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்றாள். உடனே இவன் அழத் தொடங்கினான்; 'ஏன் அழறிங்க?' என்று கண்துடைத்தாள். 'அப்புறம் உன்னைக் கட்டிப்பிடிக்கச் சொல்வாய். அப்புறம் டியூட் ஆடவேண்டும் என்பாய். கடலோரக் கவிதைகள் பாடச்சொல்வாய்' என்றான். சாரி, உங்கள் மனதைப் புண்படுத்தி விட்டேன். உங்களுக்கு நாட்டியம் வராது; பாடவராது என்பது தெரி யாது நான் வேறு ஆளைப் பார்த்துக் கொள்கிறேன்' என்றாள். மறுபடியும் 'பெண்மணி! நீ என் கண்மணி' என்று முணுமுணுத்தான். "என்ன மறுபடியும்' என்று மிரட்டினாள். 'இது சினிமாப்பாட்டு, 'விசு பாடியது' என்று விளக்கம் தந்தான். அது சரியோ தவறோ அவனுக்குத் தெரியாது. -