பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 நவீன தெனாலிராமன் அவள் சிரித்துக் கொண்டே அழுதாள். அந்தப் பெண்ணைப் பார்த்ததிலேயிருந்து அவளைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை வந்தது. அவனுக்கு அவள் விரித்த கூந்தலும் சிரித்த முகமும் பிடித்து இருந்தன. "அப்பா! நான் கலியாணம் பண்ணிக்கப் போறேன்' என்றான். "படிடா கலியாணத்துக்கு என்ன அவசரம்?' என்று கேட்டார். ‘'நீ மட்டும் ஏன் பண்ணிக்கிட்டே' என்று கேட்டான். 'உங்க அம்மாவைப் போய்க் கேளு' என்றார். 'அம்மா! நீ ஏன்மா அவசரப்பட்டுக் கலியாணம் பண்ணிகிட்டே. எனக்குப் பண்ணி வச்சிட்டு நீ பண்ணிக் கிறதுதானே' என்று கேட்டான். 'தப்புதாண்டா' என்று சொல்லிச் சமாதானப் படுத் று த த 5/ا لا 3; தினாள். ‘'நீ படிச்சு பாஸ் பண்ணு; உடனே நல்ல பெண்ணா பார்த்துக் கலியாணம் பண்ணி வைக்கிறோம்' என்றார்கள். 'பெண்ணை நானே பார்த்து வச்சிருக்கேன். நீங்க கலியாணம் மட்டும் பண்ணிவச்சாப் போதும்' என்றான். "யாருடா அவள்?' 'சொர்ணாமுகி' என்றான். நிலாவைப் பிடிக்க அவன் ஆசைப்பட்டான் "படிக்காமல் கல்யாணம் பண்ணிவைக்க முடியாது' என்று சொல்லிவிட்டார்கள். விழுந்து விழுந்து படித்தான். படிப்பே ஏறவில்லை.