பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 167 'மற்றவங்க எல்லாம் ஏன்'மா படிக்கிறாங்க' என்று கேட்டான். பட்டம் வாங்கிப் பணக்காரப் பெண்ணைக் கலி யாணம் பண்ணிப்பாங்க' என்றாள். 'நன்றாகப் படித்தால் உத்தியோகம் கிடைக்கும்; வரதட்சணை நிறைய கிடைக்கும்' என்று அவனுக்கு விளக்கம் தரப் பட்டது. 'மடப்பசங்க” என்று முணுமுணுத்தான். ‘'எதுக்குடா அப்படி முனகறே?” 'வரதட்சணை கேக்கறாங்களே அதுக்குத்தான்' என்றான். இவன் சரியாகப் படிக்கவில்லை. 'நீ குட்டிச்சுவராத்தான் போகப்போறே' என்று சபித்தார் அவனுடைய அப்பா. தான் சபித்தால் அது பலிக்காது என்பது அவருக்குத் தெரியும். டி.வி.யிலே அவன் போட்டோ வந்தது. 'ஏனுங்க இவன் போட்டோ?' என்று பெற்றுக் கடன் பட்டவள் கேட்டாள். "காணாமல் போய்விட்டான்' என்று நண்பர்களுக்குச் சொன்னார் அவர். 'போய் முதலிலே அவனைத் தேடுங்கோ' என்று அவன் அம்மா நச்சரித்தாள். 'இந்தத் குட்டிச்சுவரைப் போய்த் தேடறேன்' என்று போனார். - அவனைக் கண்டுபிடித்தார். "என்னைக் குட்டிச்சுவர் என்று சொல்லிவிட்டு ஏன் என் பின்னாலேயே வந்தீங்க' என்று கேட்டான்.