பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 நவீன தெனாலிராமன் 'அவன் திருப்பிக் கேட்டால் என்ன செய்வது; அது தான் பார்க்கிறேன்' 'இவனை யாருக்காவது சீக்கிரம் கட்டித் தொலை யுங்கோப்பா' 'ஏன் நீ அவசரப்படறே' 'எனக்கு வயசு ஆவுதே அதனால் தான்' 'இவள் யார் என்னைக் கண்டிக்கிறதுக்கு?” 'கூடப்பிறந்தவள். நீ கெட்டுப் போகக் கூடாது என்று பார்க்கிறாள். அப்புறம் யார்ரா வந்து உன்னைக் கட்டிக்குவாள்? அதுதான் அவள் கவலை!” "அப்பா காலேஜிலே சேர்றதுக்கு டொனேஷன்” 'இதை எப்படிடா ஈடு செய்ய முடியும்?' ‘'வேலையிலே சேர்றதுக்கும் லஞ்சம் தரணும்' நான் வேலைக்குப் போனதும் எல்லாம் சேர்த்து சம்பாதிச்சிடுவேன்; கவலைப்படாதீங்க” 'அப்பா நான் கராத்தே கத்துக்கிடப் போறேன்' ‘'எதுக்கும்மா இதெல்லாம்' 'நாளைக்கு சினிமாவுலே சேர்ந்தா இது ரொம்பவும் அவசியம்; சான்சு அதிகம் கிடைக்கும்” ‘'என்னம்மா எழுதறே' காதல் கடிதம்' "யாருக்கு?' "ஒரு பைத்தியத்துக்கு'? 'யாரம்மா அது” காதல் பயித்தியம் அவருக்கு” 'ஊருக்குப் போனதும் மறக்காமல் கடிதம் எழுது'