பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 187 'யாரோ செத்துக் கிடக்கிறான்” 'போய்ப் பார்க்கறது தானே' "என் மனைவி வீட்டிலே இருக்கிறாள். தேவை இல்லை.” 'கூட்டிப் பெருக்க ஒரு புது ஆளைப் பாருங்க” 'தேவை இல்லை; Calculator இருக்குது அது போதும்' "அது இல்லேங்க ஆள்' 'அவளும் தான்; நேரம் கணக்குப் பார்த்து வேலை செய்வாள். அவளைத்தான் சொன்னேன்.” "அப்பா அவள் என் பாண்டை போட்டுகிட்டு காலேஜிக்குப் போயிட்டாள்.' 'இன்ணைக்கு ஒரு நாள் அட்ஜெஸ்டு பண்ணிக் கோடா; பிறகு பார்க்கலாம்' "எப்படிப்பா' 'அவள் சேலை ஏதாவது இருக்கும் பார்த்து சுத்திக்கோ.' 'வயசு வந்த பையன் வீட்டோடு இருக்கிறான். அவனை வச்சிகிட்டுப் பெண்ணுக்கு என்ன அவசரம் கலியாணத்துக்கு?” 'அவள் நாலு இடத்துக்குப் போறவள் ஆபீசிலே உத்தியோகம் பண்றாள். எப்படி எப்படி இருக்குமோ முன் கூட்டிக் கலியாணம் செய்யறதுதான் நல்லது' "அப்பா! தாத்தா மண்டையைப் போட்டுட்டாரு' "என்னடா அவலட்சணமா பேசறே' 'கீழே விழுந்து மண்டை உடைஞ்சி போச்சு அது தான் சொல்றேன்' "பையனை ஏன்டான்னு ஒரு பேச்சுக் கேட்க மாட்டேன் என்கிறீர்களே”