பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 27 4. எல்லை கடந்த நிலை 'வியட்நாம் வீடு' இதுதான் இந்தச் சுந்தரத்தின் வீடு. அதாவது ஒய்வு அவருக்குத் தர இன்னும் சில புது வருடங்கள் பிறக்க வேண்டும். 'சீட்டுக் கிழிய பல சீட்டு கள் கிழிபட வேண்டும்; என்றாலும் அந்தநாள் அவர் எதிர்பார்த்த நாள். அதற்குள்ளாக வீட்டு 'பைல் எடுத்துத் தீர்த்து முடித்தால் அதற்கப்புறம் அவர் சீனியர் சிட்டிசன் ஆகி விடலாம். இப்பொழுது வயது முதிர்ந்தவருக்குத் தரப்படும் முத்திரை அது; வரி விலக்குகள், ரயில் பயணச் சலுகைகள், பஸ்ஸில் முந்தியில் குந்துவதற்கு ஒரு இடம். பெரியவர் என்ற பெருமைக்குத் தள்ளப்படும் வயது; அது வாழ்வின் எல்லை; அதற்குள் அவர் கடக்க வேண்டிய மைல்கல் மூன்று. மூன்றும் பெண்ணாகப் பிறக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை; எதிர்பாராமல் நடப்பது விபத்து என்று சொல்வார்கள். பழகி விடுகிறது. இதனால் பண்பாடு ஏற்படுகிறது. பொறுப்புள்ள வராகுவதற்கு இந்தப் பெண் பெற்றமை பெரிதும் உதவு கிறது; நரைமுடிகள் அவற்றிற்குக் காரண கர்த்தாவாக இந்த உதயங்கள் அவருக்கு உதவின.