பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 எல்லை கடந்த நிலை அவர் கொஞ்சம் தமிழ்ப் பற்று உடையவர். அவரைத் தமிழ்மகன்' என்றும் கூறலாம். எதிலும் தமிழ்; எங்கும் தமிழ் என்பதில் அவருக்கு நாட்டம் மிகுதி. தன் மூத்த பெண்ணுக்கு அவர் மனைவி வைத்த பெயர் 'லட்சுமி' இவர் மாற்றி வைத்தது 'திருமகள்'; அப்படித் தான் அந்தப் பெண் பதிவு செய்யப்பட்டாள். சிலர் அவளைத் தெருமகள்' என்று திரித்துக் கூறியது அவளுக்கு வேதனையாகத்தான் இருந்தது. என்றாலும், ஏட்டுப் பெயரை அவர்கள் மாற்றவே இல்லை. அவள் மன அழைப்பில் 'திருநிறைச் செல்வி திருமகள்' என்றே அழ காக அச்சிடப்பட்டது. லட்சணமா லட்சுமி என்றே இருந்திருக்கலாம். அவர் தமிழ்ப் பற்று அவளை மாற்றி விட்டது. 'திரு', 'திரு' என்று கூப்பிடுவதற்கு இது சவுகரியமாகவே இருந்தது; இருக் கட்டும்; அவள் திரு திரு' என்ற விழிப்பும் அவளுக்கு அழகு தந்தது. ‘'என்னடா மூணும் பெண்; என்ன செய்யப் போறே' என்று இவர் அவரைக் கேட்டார். அவருடைய நல்வாழ்வில் அக்கரை இருப்பதால் இந்த வினாவினை எழுப்ப நேர்ந்தது. மூன்று மனைகள் வாங்கிப் போட்டு இருக்கேன். அண்ணாநகரில் இப்பொழுது என்ன விலை போகிறது தெரியுமா? அந்தக் காலத்தில் வாங்கிப் போட்டது இன்று ஒவ்வொன்றும் 'முப்பது இலட்சம்' என்று தெம்போடு பதில் சொல்கிறார். 'எல்லாம் இந்தப் பெண்களுக்குத்தானே அந்த மனை அதற்காகவே வந்து கட்டிக் கொண்டு போய்விடு வார்கள்' என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். மூன்றும் நட்சத்திரங்கள் போல் ஒளி விட்டன. ஆனால் ஒன்றுகூட நட்சத்திரம் ஆகவில்லை; ஒழுங்காகப்