பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 எல்லை கடந்த நிலை வெளியீடு இரண்டாவது சானல்; புதிய படம்; சிலசமயம் இவளையே மூத்தவள் என்று பல் பேர் நினைத்தார்கள். உயரம்; அதுதான் காரணம். 'இரண்டு அதைப் பற்றி அவர் கவலைப்படவே இல்லை; படைப்பே இரண்டுதான் என்பார். கண், காது, கால், கை எல்லாம் இறைவன் படைப்புகள். அதுபோல் இரண்டு பெண்கள்; அழகாகத்தான் இருந்தனர். வேண்டியதுதான்; மூன்றாவது கண் அது நெற்றிக்கண்; அது மானிடர்க்குத் தேவை இல்லை; வெறும் பொட்டு போதும். அது அழகு தரும். மூன்றாவது இவளுக்கு அவர் மனைவி வைத்த பெயர் பார்வதி; இவர் மாற்றியது மலைமகள்'. எப்படித் தான் இந்தத் தமிழ்மகனுக்கு இந்த மூன்று பெயர்கள் கிடைத்தனவோ தெரியவில்லை. திருமகள், கலைமகள், மலைமகள்; அழகான பெயர்கள் மற்றவர்கள் அவளை மலையாகக் கருதினர்., மலை', 'மலை’ என்று கூப் பிட்டார்கள். எப்படி இவருக்கு மூனும் பெண்கள் என்பது பலருக்கு மலைப்பாகவே இருந்தது. அவர் தனியாக வரும்போது எந்தச் சுமையோடும் வருவது இல்லை. 'கடலில் கணபதியைக் கரைத்தனர். எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை; அது அன்றைய பத்தரிகைச் செய்தி. வேறு என்ன அவரால் பேச முடியும்? அவருக்குப் பிடித்த செய்தி அது; நாட்டு நடப்பில் அவர் காட்டிய அக்கரை அது. அவர் வந்து சந்தித்த நாளில் 'கிளிண்டன் காதல் விவகாரம்’ பத்திரிகையில் இடம் பெறவில்லை. இருந்தால் அதை அவர் கேட்டிருப்பார். அவரும் மனுஷன் தானே' என்று இவர் பதில் சொல்ல வேண்டி இருந்திருக்கும்.