பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 31 இரண்டு பேர் கணவன் மனைவி இவர்கள் வீடு வந்து சேர்ந்தார்கள். கார் வெளியே நின்றது; நிச்சயம் மன அழைப்பிதழ்தான். அவர்களுக்கு உபசரிப்புத் தரப் பட்டது. உட்கார வைத்துப் பேசி முடித்த பிறகு, 'சேஷ மகாலில் வைத்திருக்கிறோம்; வந்து விடுங்கள்' என்றார் èᎧlᎢ . 'விசேஷமான செய்திதான். நிறையபேர் வருவார் கள். இன்று அதுதானே சடங்காகி விட்டது. மாலையில் கச்சேரி, காலையில் கல்யாணம். இது நம்ம கலாச்சாரம். வாழ்க்கையிலே ஒருமுறைதான் சந்தோஷமா இருக்க முடி கிறது. அது இதுதான்' என்று நியாயப்படுத்தினார். 'இவருக்கு என்ன அவர் சேஷ மகாலில் வைக் கட்டும்; இல்லை ரஜினி வைத்திருக்கிற ராகவேந்திரா மண்டபமாவது இருக்கட்டும்; ஏ.வி.எம். வைத்திருக் கலாம். அது கூடிய விரைவில் எடுத்துவிடப் போகிறார்கள் என்று கேள்வி. 'வாசன் படப்பிடிப்பு அது காம்ப்ளெக்ஸ் ஆகி விட்டது. நிறைய பணம் பண்ணி விட்டார்கள். இனிமேல் எல்லாம் காம்ப்ளெக்ஸ்தான். இதுமுதல் வரவேற்பு. அடுத்தது அப்படியே வருவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. 'அடுத்தவள்; அவளே முடித்துக் கொண்டாள். டின்னர் மட்டும் வச்சிருக்கேன் 'என்று நீட்டினார். 'அவள் மீறிவிட்டாள். அவளாகத் தேர்ந்து எடுத்துக் கொண்டாள். பையன் டெல்லியில் வேலை பார்க்கிறான். இந்திக்காரன் அவனுக்குத் தமிழே தெரியாது. அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது”. தமிழ் மகன் அவரால் இதைச் சீரணம் செய்து கொள்ள முடியவில்லை.