பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 எல்லை கடந்த நிலை 'உன் பேரன் பேர்த்திக்கு என்ன பெயர் வைக்கப் போறிங்க' தமிழ்மகன் அவர் பெயரன் பாரத நாட்டுக் குடிமகன் ஆகப் போகிறான். எல்லை கடக்கும் நிலை ஏற்படுகிறது. அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; அவர் சொந்தத்தில் பார்த்த இடம் எதுவும் சரிப்பட்டு வரவில்லை; அவள் சுய நிர்ணயம் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததால் தனி மாகாணம் அமைத்துக் கொண்டாள். 'மலைமகள் அவள் நிச்சயம் உறுதியாகத்தான் செயல்படுவாள். படிப்படியாக நாடு முன்னேற்றம் அடை கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மைதான். 'அவள் என்ன சொல்கிறாள்?” "விசா வாங்க விடியற்காலையிலேயே போய் எம்பசியில் கியூவில் நிற்கிறாள்.' ‘'எதுக்கு? y 'அவள் அலைமகள் ஆகிறாள்; கடல் கடக்கிறாள்; கிளிண்டன் தேசத்து விசிட்டர் ஆகிறாள். 'அந்த ஊரில் நம்ம சாதிக்காரன் எவனையாவது பார்த்தால்' 'இவளுக்குப் பச்சை அட்டை இல்லை. அது இருந் தான்தான் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.' 'வாங்கி விடுகிறாள். படிக்க விடுங்கள்; அவள் போகட்டும்' சரி அவள் முயற்சி: இளைஞர்களுக்கு நாம் வழி காட்ட முடியாது; அவர்களே தேடிக் கொள்கிறார்கள்.' 'படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், தொழில் துறை வல்லுநர்கள், மருத்துவர்கள் இவர்கள் எல்லாம் நம்